Sunday, 25 May 2014

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் - சித்த மருத்துவம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் - சித்த மருத்துவம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் - சித்த மருத்துவம் 



ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் - சித்த மருத்துவம்
ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதிமந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்.

Thursday, 22 May 2014

வெற்றிலையின் மகத்துவம்


வெற்றிலையின் மகத்துவம்

மற்றும் நன்மைகள் பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொர...ுட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன. வெற்றிலையின் நுனியில் மூதேவியும் வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும் வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும் வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும் வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர். எனவே வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று. 40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும். நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால் குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின் மன்னிட்டு வாழும் பூ மாது.. வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும். அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம் இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான் கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம். வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்

// வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.//
மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை

வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.
வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.