Thursday, 31 July 2014

துளசி

துளசி - அறிவோம்

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே!
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே!
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே!
அஷ்ட ஐச்வர்யம் அளிப்பாய் நமஸ்தே !

கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
கிரகஸ்தர்கள்பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
முமுக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் கொடுப்பேன்

துளசி என்றால் தெரியாதவர் யார் ? அதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

அதற்கு ஆன்மீக மகத்துவமும் ஏராளம். துளசியை வளர்த்து, காப்பாற்றி, தரிசிப்பதால் வாக்கு, மனம், சரீரம் மூன்றினாலும் செய்த பாபங்கள் போகும்.

துளசியால் ஸ்ரீ விஷ்ணுவையோ, பரமேசுவரனையோ பூஜிக்கிறவன் முக்தியையடைகிறான். மறுபடியும் பிறவியை அடையமாட்டான்.

புஷ்கரம் கங்கை முதலான புண்ய தீர்த்தங்கள், விஷ்ணு முதலான தேவதைகள் எல்லோரும் துளசீ தளத்தில் எப்பொழுதும் வசிக்கிறார்கள்.

துளசியை சிரஸில் தரித்துக்கொண்டு பிராணனை விடுபவன் அனேக பாபங்கள் செய்திருந்தாலும் வைகுண்டத்தை அடைகிறான். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன !

இதன் வேறு பெயர்கள்:
துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி,
இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family) OCIMUM SANCTUM LINN.
Botanical name : Ocimum sanctum
Family : Lamiaceae
Vernacular names :
Hindi, Gujarati, Bengali : Tulsi
Marathi : Tulasa
Tamil : Thulasi
Telugu : Tulasi
Malayalam : Trittavu

Chemical composition
Volatile oil 0.4-0.8% containing chiefly eugenol app. 21% & B-caryophyllene 37% (eugenol content reaches maximum in spring & minimum in autumm). A no. of sesquiterpenes & monoterpenes viz., bornyl acetate, ß -elemene, methyleugenol, neral, ß-pinene, camphene, a-pinene etc. : ursolic acid, campesterol, cholesterol, stigmasterol, ß-sitosterol and methyl esters of common fatty acids.

வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். !
என்ன செய்வது ? அருகில் எளிதில் கிடைப்பதால் அருமை தெரிவதில்லை !
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது.!

தெரியுதா பெருமாள் கோவிலுக்கு போனால் தீர்த்தம் வாங்க மறக்காதீர்கள் !இன்னும் பாருங்கள் !

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்கவே அச்சப்படும் !

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றமா நாற்றமா உங்களிடமா ? போயே போச்சு !

சோப்பு கூட துளசியில் செய்கிறார்கள். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசியை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

இன்னும் சமீபத்திய அச்சுறுத்தலான பன்றிக் காய்ச்சலை துளசி பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாக செய்திகள் கூறிகின்றன .

மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.

இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு.

ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு.

நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி.

டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர் கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும்.

20 அல்லது 25 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும்.

இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது என்கிறார்.

நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல்.

துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா (ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா) ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை.

துளசியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.!

நான் சொன்னால் சொன்னால் நம்பமாடீர்கள் நம் தாஜ்மகாலை பாதுகாக்க 10 லட்சம் துளசி செடிகள் உதவுகின்றன !

சிறந்த மருத்துவ குணங் கள் கொண்டதுளசி செடி, தற்போது தாஜ் மகாலை சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.உ.பி.,யின் வனத்துறை மற்றும் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மகாலைச் சுற்றி 10 லட்சம் துளசி கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் கிருஷ் ணன் குப்தா கூறியதாவது: தற்போது வரை 20 ஆயிரம் துளசி கன்றுகள் நடப் பட்டுள்ளன. தாஜ் மகாலுக்கு அருகில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் ஆக்ரா முழுவதும் துளசி கன்றுகள் நடப்பட உள்ளன.சுற்றுப்புறத்தை தூய் மைப்படுத்துவதற்கான சிறந்த செடிகளுள் ஒன்று துளசி. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசிக்கு உள்ளது. தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள் இதனால் குறையும்.இவ்வாறு கிருஷ்ணன் குப்தா கூறினார்.

தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தேவிகா நந்தன் திம்ரி கூறுகையில், "துளசி அதிகளவிலான ஆக்சிஜன் வெளியிடும், இது, காற்றில் காணப்படும் மாசுகளைக் குறைக்க நிச்சயம் உதவும். காற்றை சுத்தப்படுத்துவதன் மூலம், தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளால் தாஜ் மகாலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்' என்றார்.

Wednesday, 30 July 2014

ஆண்டிபயாடிக் மருந்துகள்

VdBFzFI.jpg


கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவச் சாதனை என்று போற்றப்படுவது, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்று அழைக்கப்படும் ‘ஆண்டிபயாடிக்’குகளைக் கண்டுபிடித்ததுதான்.

உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு 1928-ல் நோபல் பரிசு கிடைத்தது.

உலக அளவில் 1930-க்கு முன்னால் சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூடப் பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் மனித உயிர்களைப் பலி வாங்கிய வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆண்டிபயாடிக்கின் வரவு மனிதக் குலத்தை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியது.

எழுபது ஆண்டுகளுக்கு முன், எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆண்டிபயாடிக் இப்போது முனை மழுங்கிய வாளாக நோயால் வாடும் மருந்தாக தன் சக்தியை இழந்து கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டிபயாடிக் ஆய்வு முடிவின் அறிக்கை இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

‘இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் சவால் விடுகின்றன; நோய்களுக்கு எதிராக இந்த மருந்துகள் நடத்தும் தாக்குதலுக்கு அவை பெரும் தடையாக நிற்கின்றன; ஆண்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதனால் நிமோனியா, கொனோரியா, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆண்டிபயாட்டிக்குகள்கூட செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன?

qKm0i4k.jpg


ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால் அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம்.
அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, எஞ்சியுள்ள கிருமிகள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிவிடும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.

மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்


கடந்த ஒரு நூற்றாண்டாக மிரளவைத்துக் கொண்டிருக்கும் காசநோய், இதற்கு நல்ல உதாரணம். காசநோய் முற்றிலும் குணமடையக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.

ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நம்பி பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடும் திறனைப் பெற்றுவிடுகின்றன.

அதன் பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால், இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாத சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டும் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காச நோயாளிகள் இந்த நிலைமையில் உள்ளனர்.


இரட்டை முனைக் கத்தி!

ஆண்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது: நம் நாட்டில் சாதாரணச் சளிக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக (Over dose) பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.
அதற்குப் பதிலாக அதைவிட வீரியம் நிறைந்த ஆண்டிபயாடிக்குகளைத்தான் அலோபதி மருத்துவம் இப்போது பயன்படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவுகளும் கூடுதல்.

அலட்சியம் வேண்டாம்!

8WMaTDj.jpg?1

ஆண்டிபயாடிக் விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறோம் என்பதை இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆண்டிபயாடிக் சிகிச்சையை முறை தவறிப் பயன்படுத்தும்போது, எதிர்ப்பு சக்தி உடைய கிருமிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, ஆண்டிபயாடிக் மருந்துகளையே பயனற்றவையாக ஆக்கிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.

இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் மோசம். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூடப் பல மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நோயாளிகளும் இதுபோன்ற ஆண்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காகச் சாதாரண நோய்களுக்குக்கூட அதிக வீரியமுள்ள ஆண்டிபயாட்டிக்குளை வலிந்து பரிந்துரைக்கின்றன.

நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் இந்தியாவில் அதிகமான ஆண்டிபயாடிக் பயன்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் 50 சதவீத ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் நோயாளிகளும் அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை.


இந்திய நிலைமை

ADfoWpi.png


இந்தியாவில்தான் காலரா, டைஃபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில் வழக்கமான ஆண்டிபயாடிக்குகளுக்கு தடுப்பாற்றலைக் கிருமிகள் பெற்றுவிட்டால், அந்த ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாமல் போகும்போது என்ன செய்வது?

1987-க்குப் பிறகு நம் நாட்டில் புதிய ஆண்டிபயாட்டிக் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மருந்துகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல்நாடுகளைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டும். இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆண்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!


நம் கடமை என்ன?


பொதுச் சுகாதாரம் குறைவதுதான் நோய் தொற்றுவதற்கான முக்கியக் காரணம். எனவே, சுய சுத்தம் காப்பதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேணுவதும் நமது மிகப் பெரிய கடமைகள். சுத்தமான குடிநீருக்கும் சுகாதாரமான உணவுக்கும் உத்தரவாதம் வேண்டும். நோய் வந்துவிட்டால் சுயமருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெறுவதுதான் நல்லது. முதலில் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அவர் பரிந்துரைத்தால், சிறப்பு நிபுணரிடம் மேல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.

ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர் சொல்லும் கால அளவையும் மருந்தின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர்களும் நோயாளிகளுக்குச் சரியான வழிகாட்டுதலைத் தர வேண்டும். மருந்துகளை எழுதிக் கொடுக்கும்போது, மருத்துவருக்குரிய கோட்பாட்டின்படி நடந்துகொள்ள வேண்டும்.


ஒருங்கிணைந்த மருத்துவம்!

mqbujH1.jpg


எல்லா நோய்களுக்கும் அலோபதி சிகிச்சைதான் சிறந்தது என்பதில்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளிலும் நோய் குணமாகும். வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இதை மறந்தாலோ அல்லது மறுத்தாலோ சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். இது, மனித குலத்துக்கு நுண்ணுயிரிகள் விடுக்கும் எச்சரிக்கை.





சுயமருத்துவம் உயிரையும் பறிக்கலாம்!


மேல்நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் வீரியமுள்ள மருந்தையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடியும்.
மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழி அமைக்கிறது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனையைக் கூட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு ஆண்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆண்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது 2011-ல் வெளியாகியிருக்கும் உலகச் சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம்.


இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த நிறுவனம்.

Wednesday, 23 July 2014

​​​கடுக்காயின் மருத்துவப் பயன்கள்

​​
​​
கடுக்காயின் மருத்துவப் பயன்கள் :-
++++++++++++++++++++++++++++++++
மூலிகையன் பெயர் -: கடுக்காய்
வேறு பெயர்கள் –: அமுதம்.
வகைகள் –: ஏழு வகைப்படும். அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.
பயன் தரும் பாகங்கள் –: காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.
வளரியல்பு –: கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும். நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது. விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன. மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன. புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.
கடுக்காயின் மருத்துவப் பயன்கள் –:
கடுக்காயில் ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும். காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள். கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன் படுத்திகிறார்கள். இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.
கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

Friday, 18 July 2014

Brown Rice Kills 78% of Breast Cancer Cells

Brown Rice Kills 78% of Breast Cancer Cells in Vitro and Reduces Risk in Women: In this study, researchers showed that brown rice extract killed up to 78% of breast cancer cells (and also 63% of colon cancer cells). Interestingly, the crude brown rice extract was much more effective in killing cancer cells than any of its individual compounds taken on their own (whole foods are always better). But is this lab study result relevant to women? A recent study out of Korea would suggest yes: women eating the most mixed brown rice (350 grams daily) were shown to have 58% less breast cancer (24% less risk for every 100 grams of brown rice eaten daily). In that study, white rice had no effect, or even slightly raised breast cancer risk. Brown rice is a natural, whole food rich in anti-cancer compounds such as tricin, caffeic acid, ferulic acid, gamma-oryzanol and others. It’s also high in fiber which slows down digestion and gives it a lower (and healthier) glycemic index compared to white rice. Other studies have also shown that brown rice may reduce the risk of colon and pancreatic cancers. Brown rice makes a great addition to a healthy diet rich in organic vegetables, fruit, herbs and whole foods, and can be used in almost any recipe that calls for white rice. It just may take a little longer to cook, but the health benefits are clearly worth it
#‎Brownrice‬ ‪#‎BreastCancer‬ ‪#‎Rice‬
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/11097223


Characterization of potentially chemopreventive phenols in extracts of brown rice that inhibit the growth of human breast and colon cancer cells.

Abstract

Rice is a staple diet in Asia, where the incidence of breast and colon cancer is markedly below that in the Western world. We investigated potential colon and breast tumor-suppressive properties of rice, testing the hypothesis that rice contains phenols that interfere with the proliferation or colony-forming ability of breast or colon cells. Brown rice, its white milled counterpart, and bran from brown rice were boiled and extracted with ethyl acetate. The extracts were analyzed by high pressure liquid chromatography-mass spectrometry. Eight phenols, protocatechuic acid, p-coumaric acid, caffeic acid, ferulic acid, sinapic acid, vanillic acid, methoxycinnamic acid, and tricin, were identified in the extracts of bran and intact brown rice. These extracts were separated into nine fractions by column chromatography. The effect of bran extract and its fractions at 100 microg/ml on cell viability and colony-forming ability of human-derived breast and colon cell lines was assessed. Bran extract decreased numbers of viable MDA MB 468 and HBL 100 breast cells and colon-derived SW 480 and human colonic epithelial cells as judged by the 3-(4,5-dimethylthiazol-2-yl)-5-(3-carboxymethoxyphenyl)-2-(4 -sulfophenyl)-2H-tetrazolium assay. It also reduced colony formation of SW 480 colon and MDA MB 468 breast cells. Of the eight phenols identified in the brown rice bran, when applied at 50 microM, caffeic acid decreased numbers of all cell types except HBL 100. Tricin, ferulic acid, and methoxycinnamic acid interfered with cell viability in one or more cell lines. Tricin (50 microM) and the other phenols (200 microM) inhibited colony formation of SW 480 cells. Clonogenicity of MDA MB 468 cells was inhibited by caffeic acid, ferulic acid, and tricin (50 microM). Tricin was the most potent anticlonogenic of the compounds with IC50s of 16 microM in the SW 480 colon cells and 0.6 microM in the MDA MB 468 breast cells. The results suggest that: (a) brown rice and bran contain compounds with putative cancer chemopreventive properties; (b) certain phenols contained in brown rice bran, e.g., tricin, may be associated with this activity; and (c) these phenols are present at much lower levels in white than in brown rice. Thus, the consumption of rice bran or brown rice instead of milled white rice may be advantageous with respect to cancer prevention

Sunday, 13 July 2014

அக்குப்பிரஷர்

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
அக்குப்பிரஷர்
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக்கொள்கிறோம்.
அப்படி செய்தால், வலி குறைகிறது.
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர்புள்ளிகள் உள்ளன.
நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம்.
ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம்.
அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள்எடுத்து கொள்வதால், அசிடிட்டியால்துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள்,
நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளகட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
14 முறைஅழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும்.
அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும்,
14 முறை முடிப்பதற்கு முன்பே
தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம்.
வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை
கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும்.
அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள்
தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன.
விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து
தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல்,
இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும்,
கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14
முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.
10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன.
மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.
ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும்.
அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி
விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற
புள்ளி உள்ளது.
மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க
இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release)
தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு,இப்புள்ளியில்
அழுத்தும் போது வலிதெரியும்.
இரு கைகளிலும் அழுத்தம்
கொடுக்கலாம்.
அசிடிட்டி
அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து
தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி
உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது.
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை
உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளமுகவாயில் உள்ள
CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க
பெரிதும் உதவுகிறது.
LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும்
அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14
முறைகள் அழுத்தம் கொடுத்தால்,
மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில்
உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை
உண்டாக்குகின்றன.
எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம்.
கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை
விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளஇப்பகுதியில்
உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின்
இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம்
கொடுக்க வேண்டும்.
பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம்
வெகுவாக குறைகிறது.
கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம்
கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள்
முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள
வேண்டியிருக்கும்.
அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட
புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும்
போது, சிறிது, சிறிதாக மாத்திரையின்
அளவை குறைத்து, கடைசியில்
முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே
உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது.
இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள்
விரிவடைந்து, ரத்த அழுத்தம்
குறைகிறது.
தலை உச்சியில்GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்துதலைக்கு செல்லும்
நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு
செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில்
இப்புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம்
இவை குறைவதால், ரத்த அழுத்தம்
சீராகிறது.
H9 , GV20 இப்புள்ளிகளில்,14 முறைகள்
காலையிலும், மாலையிலும் இருவேளைகள்
அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த
அழுத்தம் சீரடைகிறது.
இதை தவிர காலில், பெருவிரல்,
இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து,
மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி
உள்ளது.
இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம்
கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது.
இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை
மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம்
கொடுக்க வேண்டும்.
அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த
அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!--

Thursday, 10 July 2014

பேரீட்சை கீர்

சமைக்காமலேயே.....9
பேரீட்சை கீர்
200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.
பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிஃபனாக சாப்பிடலாம். ரத்தம் விருத்தியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும்

Kalakai (கெலாக்காய்)



Kalakai (கெலாக்காய்)
Kalakai is a small kind of berry grows on shrubs. It is a rich source of iron, so it sometimes used in treatment of anaemia.[citation needed] It contains a fair amount of Vitamin C and therefore is an antiscorbutic. In Hindi it is called as Karonda, in Tamil we call it as Kalakai, in Telugu, wakay okachettu and the botanical name is Carissa Carandas. They are very sour in taste and hence they are commonly used in pickle. Simple and easy to make, here is the recipe...
Kalakai Pickle
Ingredients
Kalakai - 3 cups
Gingelly Oil - 50 ml
Fenugreek Seeds - 1/4 tsp
Mustard Seeds - 1 tbsp
Red Chilly powder - 4 tbsp
Turmeric powder - 1/4 tsp
Salt to taste
Kalakai Pickle
Method
Wash the berries throughly and cut them into half and take out the seeds from it and keep aside.
Heat oil in a wok, add fenugreek and mustard seeds allow it to splutter.
Then add red chilly powder, turmeric powder and salt to it and mix well.
Next add the kalakai to it and saute in the oil till it becomes soft and completely cooked.
Allow it to cool and store it in a bottle.

Thursday, 3 July 2014

Ghee

The goodness of Ghee



For those who still do not believe the goodness of GHEE.
 
 
After rice, I feel Ghee occupies the unenviable position as one of the most misunderstood foods in India today. At one time considered the food of Gods, its now a “fattening” ingredient and somehow responsible for the lifestyle diseases of this generation. But is that the truth? Since the 70s and 80s when inspired by the marketing and propaganda of “heart healthy” vegetable oils, an entire country let go off its 5000-year old food wisdom to eat Ghee, has our heart health really improved? Are there fewer cases now of diabetes, high cholesterol, etc? Or did we make a blunder when Ghee was labeled “saturated fat” and pushed in the same category as trans-fats and hydrogenated fats?
 
Here is the summary of “The goodness of Ghee” 
 
Things we don't know or don't bother to know about GheeMost common myths about Ghee and where you should banish them
Ghee has antibacterial and antiviral properties. Other than helping you recover from sickness, it ensures that you don't fall sick.Ghee is fattening - Ghee by nature is lipolytic, that which breaks down fat. And this is due to its unique short chain fatty acid structure.
The anti-oxidants in Ghee make it the miraculous anti-wrinkling and anti-ageing therapy you were searching for.Ghee is a saturated fat - It's a saturated fat, yes, but with such a unique structure that it actually helps mobilize fats from stubborn fat areas of the body. Not a saturated fat like trans-fats in your biscuits, cakes, pizza, etc.
Ghee is excellent for joint health as it lubricates and oxygenates them.Ghee will increase cholesterol - Ghee reduces cholesterol by increasing contribution of lipids towards metabolism. Liver produces excess cholesterol under stress. Ghee helps you de-stress, sleep better and wake up fresher.
Ghee takes nutrients from your food and deliver them through fat permeable membranes like in the brain.Ghee is harmful for heart - Rich in antioxidants, conjugated linoleic acid (CLA) and fat soluble vitamins like A, E, D, Ghee has just what you need for a healthy heart.
Ghee improves your satiety signal and ensures you eat the right amount of food.Ok, ok fine, Ghee is good, but must not eat it too much – Traditionally we add Ghee in each meal. The quantity at which the taste of food is best is the right quantity. Only your tongue and stomach can tell you that. 
 
What does our ancient food wisdom tells us: Runam krutva, ghrutam pibet - take a loan, but drink ghee. Cook in it or add on top of cooked food, it will continue to bless you.