Wednesday, 15 October 2014

மூட்டு வலி

உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி

 ”கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் 
குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து 
போகும்’  என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், “டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற 
பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: “அடிபடும் போது அல்லது 
கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு 
விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன’ என்பது பற்றி, 
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி 
ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் 
செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு 
நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் 
தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் 
மகத்துவத்தை உணர்த்தின. 
உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, 
எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை 
வழங்குகின்றன
இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் 
ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, 
இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி 
பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், 
வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் 
போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. 

உப்பு நீரை, ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த 
துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் 
கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா 
முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் 
ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல 
ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். 

உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது
ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு 
வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. 
மருத்துவத்தில் பயன்படும், “ஹைபோடோனிக்’ கரைசலில், மிகவும் 
குறைந்தளவு உப்பே உள்ளது. 
இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான 
எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான 
உப்பைக் கொண்ட, “ஹைபர்டோனிக்’ கரைசல், எரிச்சல் ஏற்படாமல் 
மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து 
போய், பலவீனமாக இருப்போருக்கு, “ஹைபர்டோனிக்’ கரைசல் 
கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான மூட்டு வலியால் 
அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம்
இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, 
ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன.

நன்றி: தினமலர்

Tuesday, 14 October 2014

​கரும்புச்சாறு

கரும்புச்சாறு
.......................
நமது நாட்டின் அரிசி, கோதுமை அடுத்து கரும்பு மிகவும் அதிகமாக உற்பத்தியாகிறது. வடநாடுகளில் கரும்புச்சாறை அதிகம் பருகுகின்றனர். தமிழ் நாட்டில் இதன் பயன்பாடு பெருக வேண்டும்.
இதிலிருந்து பெறப்படும் வெள்ளைச் சீனியால், பலவகை இனிப்புகளால் நீரிழிவு நோய்கள் பெருகிவிட்டன. எனவே அன்பர்கள் வெள்ளைச் சீனியைத் தவிர்த்து அதற்க்கு பதிலாக கரும்புச்சாறு, பேரீட்சை, தேன், நாட்டு வெல்லம் தாராளமாக பயன்படுத்தலாம்.
கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்:
நீர்=90%
மாவுப்பொருள்=9%
புரோட்டின்=0.3%
கொழுப்பு=0.2%
கால்சியம்=6 யூனிட்
இரும்புத் தாது=2 யூனிட்
வைட்டமின் B1=0.02 யூனிட்
வைட்டமின் B3=0.02 யூனிட்
வைட்டமின் C=10 யூனிட்
பாஸ்பரஸ்=10 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
.....................................
******உடலுக்கு தேவையான மாவுச்சத்து, இனிப்புக் கிடைக்கிறது. புத்துணர்வு
தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது.
****** காமாலை வராமல் தடுக்கிறது.
****** சிறுநீரகப் பிணிகள் விலகி நலம் கிட்டும். மலச்சிக்கல் தீரும்.
***** அதிக வெப்பசக்தி தரவல்லது.
***** உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.
கச்சிதமான உடலுக்கு தினமும் கரும்புச்சாறு அருந்தலாம்.

Friday, 10 October 2014

இலைச் சாறு

இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்
அருகம்புல் சாறு-
அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக்கொள்ளவேண்டும். எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது.இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்.
துளசி இலைச்சாறு-
காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது.
தூதுவளை இலைச்சாறு-
மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு-
உடல் தங்கம் நிறமைடயும், கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து அறிவு தெளிவு ஏற்படும்.காமாலை தீரும், மலச்சிக்கல் நீங்கும்.
பொன்னாங்கண்ணி இலைச்சாறு-
உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும், கண்ணொளி அதிகரிக்கும் வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.
வல்லாரை இலைச்சாறு-
நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.
வில்வ இலைச்சாறு-
காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.
முசுமுசுக்கை இலைச்சாறு-
தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.
புதினா இலைச்சாறு-
வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.
நெல்லிக்காய் சாறு-
தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும், நன்கு பசிக்கும், இதயநோய்கள் குறையும், நீரழிவு நோய் குறையும், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.
வாழைத்தண்டுச் சாறு-
சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், இரத்த அழுத்தம் குறையும், தொந்தி குறையும், அமிலத்தை குறைக்கும், உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
சாம்பல் பூசணிக்காய் சாறு-
பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.
கேரட் சாறு-
கண்பார்வை ஒளி பெறும், கண்நோய்கள், பல்நோய்கள் குறையும், அமிலத்தைக் குறைக்கும்.
அரச இலைச்சாறு-
மலச்சிக்கல், உடல் சூடு, கர்ப்பப்பை நோய்கள் குறையும், காம உணர்வுகளைத் தூண்டச் செய்யும்.
பூவரசு இலைச்சாறு-
காலரா, தொழுநோய், தோல் நோய்கள் குறையும்.
கொத்தமல்லிசாறு-
பசியைத் தூண்டும், பித்தம் குறையும், வாத நோய் குறையும், காய்ச்சல் குறையும், மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

Wednesday, 8 October 2014

தீப்பட்ட புண் / தீப்புண்

தீப்பட்ட புண் எரிச்சல் குறைய
செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல், காந்தல் குறையும்.
தேங்காய் எண்ணெயுடன் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.
குப்பைமேனி இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து புண்மேல் தடவி வந்தால் தீப்புண் குறையும்.
வேப்பங் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்துத் தீப்பட்ட புண்களின் மீது பூசிவந்தால் தீப்புண் குறையும்.
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து இலேசாக அடித்து கலக்கி தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் மற்றும் எரிச்சல் குறையும்.
வெந்தயத்தை பொடி செய்து தீப்பட்ட புண்ணின் மீது தடவினால் தீப்புண் குறையும். -
உருளைக்கிழங்கை சாறு எடுத்து தீப்புண்களில் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.

Sunday, 5 October 2014

வாய்ப்புண்

வாய்ப்புண் குறைய
பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
..............................................
நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
.............................................
திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை எடுத்து சுத்தம் செய்து ஒரு கல்வத்தில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில் சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி அதில் இடித்த பொருட்களை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்பு அதை இறக்கி ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரப்படுத்தவேண்டும். காலை ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்கிரந்தி குறையும்.
.......................................................
திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.
.........................................................
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
..........................................................
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

Saturday, 4 October 2014

சீரகம்

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:-
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு

Monday, 11 August 2014

பிராணாயாமம்

 
பிராணாயாமம் என்னவெல்லாம் செய்யும்:
மூச்ச சும்மா இழுத்து விட்டுட்டா பெருசா என்ன நடந்திரும்? இப்படிப் பிராணாயாமத்தை சாதாரணமாகப் பார்க்கும் நிலை பரவலாக உள்ளது.
பிராணாயாமம் பற்றியும், 6 மாதங்கள் தொடர்ந்து அதனைப் பயிற்சி செய்தால், நிகழக் கூடிய அற்புதங்கள் சொல்லில் அடங்காதது.
யோகா ஒரு கடல் போல பரந்திருக்கிறது. யோகாவின் பல்வேறு பயிற்சிமுறைகளை, குறிப்பாக பிராணாயாமா சுவாசத்தைப்பற்றி விரிவாக பார்போம்.

நீங்கள் இப்போதிருக்கும் நிலைக்கு அடுத்த உயர்வான விழிப்புணர்வு நிலையை, புரிதலை, அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதற்கு உங்கள் உடல், மனம் மற்றும் சக்தி நிலையை தயார்படுத்த வேண்டும்.
யோகாவின் அடிப்படைக் கொள்கைகள் உங்களது மனதை ஒரு குறிப்பிட்ட வகையில் தயார்படுத்தி, முதிர்ச்சியடைய வைக்கும்.
யோக ஆசனங்கள், உங்கள் உடல் உயர்ந்தநிலை சக்திகளை பெறுவதற்கு உதவி செய்யும்.
பிராணாயாமா உங்கள் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத் தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது.
பிராணாயாமா உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக ஆக்குகிறது. ஆனால் அத்துடன் அதன் பயன்கள் முடிந்துவிடவில்லை.
பிராணாயாமா ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும் இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது.
அது உங்கள் வாழ்க்கை அனுபவத்தையே மாற்றிவிடும் ஒரு கருவியாகும். பிராணாயாமா உங்களை உங்களது உடலின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, உங்கள் உள்ளே அடியாழத்தில் இருக்கும் உள்பரிமாணத்தை உணரச் செய்கிறது.
பிராணாயாமா சுய விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு முழுமையான பாதை. யோகாவின் எட்டு பிரிவுகளான யாமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரதியஹாரா, தாரணா, தியானா, சமாதி ஆகியவற்றில் பிராணாயாமா என்பதும் ஒரு பிரிவு.

முதல் இரண்டு பிரிவுகளும், ஒரு தொடக்க நிலை சாதகர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை போதிக்கின்றன.
அவை பெரும்பாலும் ஒருவரின் வளர்ச்சிக்கு உதவும் ஒழுக்க விதிகளைப் போன்றவை. நிறைய பேருக்கு யோகா என்றாலே ஆசனங்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது.
ஆசனா என்பது உடலுக்கானது. உடல் என்பது மக்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது அவர்களை பல விதங்களில் ஆட்சி செய்கின்றது.
உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களால் உங்கள் உடலைத் தாண்டி சிந்திக்க முடியாது.
இப்போது உங்கள் காலில் வலி இருக்கிறதென்றால், நான் உங்களிடம் ஞானமடைவதைப் பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ பேசினாலும், நீங்கள் உங்கள் கால் வலிக்கான நிவாரணத்தைப் பற்றித்தான் சிந்திப்பிர்கள்.
உங்கள் உடலுக்கு உங்கள் மேல் அத்தனை ஆதிக்கம் இருக்கிறது. அப்படியென்றால் ஆசனா என்பது வெறும் உடல் வலிமை பெறுவதற்கு மட்டும்தானா? இல்லை. அது உங்கள் உடலை இப்போதிருக்கும் நிலையிலிருந்து இன்னும் சூட்சுமமான நிலைக்கு நகர்த்திச் செல்வதற்கு உதவுகிறது.

யோகாவின் முழுச் செயல்பாடுமே உங்களுக்குள் இருக்கும் அந்த சக்தியை மிகவும் சூட்சுமகாக ஆக்கி, இப்போது மனிதராக இருக்கும் நீங்கள், தெய்வீக நிலையை அடைவதற்கு உதவுவதுதான்.
அதேபோல, ஒரு மனிதனின் சக்திநிலை மந்தமாகவோ அல்லது சூட்சுமமாகவோ இருக்கலாம். உங்களைச் சுற்றியிருக்கும் படைப்புகளைப் பார்த்தால், இன்றைய நவீன விஞ்ஞானம் ஒப்புக் கொள்வதைப் போல, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்திதான் நிரம்பியுள்ளது.
அந்த சக்திதான் இங்கே மண்ணாகவும், கீழே ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பாகவும், அங்கு நிற்கும் மரமாகவும், எங்கும் இருக்கும் மனிதர்களாகவும் மாறியிருக்கிறது.
அதே சக்தியைத்தான் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். அந்த ஒரே சக்தி தன்னை பல விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது.
அந்த சக்தி மிகவும் மந்தமான நிலையிலிருந்து, உச்சநிலை வரை பரந்துள்ளது.
அதில் மிகவும் மந்தமான சக்தியை, நீங்கள் உயிரற்ற அஃறிணை பொருட்கள் என்றும், உச்சநிலை சக்தியை கடவுள் என்றும் அழைக்கிறீர்கள்.
யோகாவின் முழுச் செயல்பாடுமே உங்களுக்குள் இருக்கும் அந்த சக்தியை மிகவும் சூட்சுமகாக ஆக்கி, இப்போது மனிதராக இருக்கும் நீங்கள், தெய்வீக நிலையை அடைவதற்கு உதவுவதுதான்.
உங்களுடைய சக்தியை உங்களுக்குள்ளாகவே இன்னும் சூட்சுமமான நிலைக்குக் கொண்டு செல்வதற்கு, உங்கள் உடலும், மனமும், சக்திகளும் ஒத்துழைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அது சாத்தியமில்லை. இதைத்தான் நாம் பிராணாயாமா பயிற்சியில் செய்கிறோம்.
ஆறு மாதங்கள் பிராணாயாமா பயிற்சி செய்த பின் பார்த்தால், நீங்கள் முன்பிருந்ததை விட அனைத்து விதங்களிலும் இன்னும் சூட்சுமமான மனிதராக ஆகியிருப்பீர்கள்.
வாழ்க்கையை இன்னும் அதிக புத்திசாலித்தனத்துடன் உணர்ந்து, அனுபவிப்பீர்கள்.